செப்டிக் டேங்கில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
திருநெல்வேலி:திருநெல்வேலியில் செப்டிக் டேங்கில் தளம் உடைந்து தவறி விழுந்த 70 வயது மூதாட்டி வசந்தாவை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.திருநெல்வேலி பெருமாள்புரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்.இவரது தாயார் வசந்தா . நேற்று வீட்டின் பின்புறம் குப்பை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அதனை செப்டிக் டேங்க் மீது நின்று வசந்தா பார்த்துக் கொண்டிருந்தார். உடைந்திருந்த செப்டிக் டேங்க் மேல் தளம் திடீரென இடிந்து உள்ளே விழுந்தது. இதில் வசந்தாவும் செப்டிக் டேங்கிற்குள் விழுந்தார்.தீயணைப்பு வீரர்கள் செப்டிக் டேங்க் தளத்தை முழுவதுமாக அகற்றி உள்ளே கழிவுக்குள்சிக்கிக் கிடந்த வசந்தாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.