வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Matt P
நவ 11, 2024 12:12
கத்தியை முதலில் எடுத்திருக்கிறார்
திருநெல்வேலி:நாங்குநேரி அருகே தகராறில் அண்ணன் மனைவியின் இடது காதை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தளபதிசமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் தங்கப்பெருமாள் 33. அண்ணன் சுடலைமணி 35. இருவரது வீடும் அருகருகே உள்ளன.அண்ணன் வீட்டு மின் வயர் தங்கப்பெருமாள் வீட்டின் மேல் சென்றது. இது தொடர்பாக தங்க பெருமாள் அண்ணன் மனைவி ஹனி டில்டாவிடம் தகராறு செய்தார்.ஹனி டில்டா 29, கையில் கத்தியை எடுத்தார். தங்க பெருமாள் அரிவாளால் அவரது இடது காதை வெட்டினார். காது துண்டாகி விழுந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏர்வாடி போலீசார் தங்கப்பெருமாளை கைது செய்தனர்.
கத்தியை முதலில் எடுத்திருக்கிறார்