உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / படிக்கச் சொன்ன தந்தையை கொலை செய்த மகன் கைது

படிக்கச் சொன்ன தந்தையை கொலை செய்த மகன் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலியில் படிக்கச்சொல்லி தந்தை கண்டித்த நிலையில் இரவில் துாங்கிக் கொண்டிருந்தபோது அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மேலப்பாளையம் அசோகபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரியப்பன் 48. மனைவி சகுந்தலா. இரு மகள்கள், மூத்த மகன் தங்கப்பாண்டி 19, ஆகியோருடன் வசித்தார். தங்கப்பாண்டி, திருநெல்வேலி தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இதனிடையே மாரியப்பன் தன்னைப் போல மகனும் படிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதால் அடிக்கடி படிக்கும்படி கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவிலும் இதில் கண்டித்துள்ளார். இந்நிலையில் இரவில் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் துாங்கிய மாரியப்பன் தலையில் பெரிய கல்லை துாக்கி போட்டு கொலை செய்த மகன் தங்கப்பாண்டி வெளியூருக்கு தப்பி செல்வதற்காக திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். மாரியப்பன் கொலை செய்யப்பட்டதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மேலப்பாளையம் போலீசிற்கு தெரிவித்தார். தங்கப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Veluvenkatesh
ஜூன் 26, 2025 15:48

படிக்கிறதுக்கு இப்ப என்ன காமராஜர் ஆட்சியா நடக்குது? குடிக்கிறதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் அப்பாவின் செல்ல பிள்ளைகள்தான். நோ படிப்பு, நோ எக்ஸாம், நோ பெயில்....அப்புறம் எங்க உறுப்படுறது???


theruvasagan
ஜூன் 26, 2025 15:43

திராவிட மாடல் ஆட்சியில் படி என்பதற்கு பதிலாக குடி என்று அப்பா சொல்லியிருந்தால் இந்த விபரீதம் நடந்திருக்காது.


கண்ணன்
ஜூன் 26, 2025 11:44

திராவிட மாடல் கட்சிக்குப் பொருத்தமாக ஒரு அடிமை சிக்கியாச்சு


shyamnats
ஜூன் 26, 2025 10:52

மகன் தந்தை க்கு ...கொல் எனும் சொல் எனும் திருக்குறளை தப்பாக படித்து புரிந்து கொண்டிருப்பாரோ? எங்கும் தண்ணீராக கிடைக்கும் தண்ணியால் வந்த விளைவோ என்னமோ. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு,


rasaa
ஜூன் 26, 2025 09:54

அந்த அப்பா குடி என்று சொல்வதை இளைஞர்கள் கேட்டு நடக்கும்போது சொந்த அப்பா படி என்று நல்லபுத்தி கூறலாமா?


Mohan
ஜூன் 26, 2025 09:16

இவன புடுச்சு தூக்குல போட்ருங்க ..நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவாது ....தறுதலயா வந்து நாட்டை கெடுக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை