மேலும் செய்திகள்
சென்னையில் சட்டக்கல்லுாரி அமைச்சர் ரகுபதி பதில்
11-Jan-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே டூவீலரில் சென்ற சட்டக் கல்லூரி மாணவர் குப்பை வண்டியில் மோதி பலியானார்.திருநெல்வேலி மானுாரை சேர்ந்த தாவூது மகன் அமீர் ரகுமான் 24. பெங்களூரு தனியார் சட்டக் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்தார். திருநெல்வேலியில் வங்கிக்கு சென்றவர் நண்பர் விக்னேஷ் என்பவருடன் டூவீலரில் மானுார் திரும்பிக் கொண்டிருந்தார்.மானுார் ரஸ்தா பகுதியில் திருச்செந்துார் சென்ற பாதயாத்திரை பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். அப்போது முன்னதாக சென்ற ஊராட்சி குப்பை வண்டியை முந்த முயற்சித்த ரகுமானின் டூவீலர், அந்த வண்டி மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். விக்னேஷ் படுகாயமுற்றார். அமீர் ரகுமான் இறந்தார்.
11-Jan-2025