சென்னை புதுமண தம்பதி நெல்லையில் தற்கொலை
திருநெல்வேலி; சென்னையை சேர்ந்த புதுமண தம்பதியினர், திருநெல்வேலியில் வாடகை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.சென்னை, திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் விஜயன், 26, பவித்ரா, 24. இருவரும் உறவினர்கள். காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக, சென்னையில் இருந்து டூ - வீலரில் திருநெல்வேலி வந்தனர். கோட்டூர் ரோடில் கடந்த 7ம் தேதி வாடகைக்கு வீடு பிடித்து தங்கினர்.நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்காமல் இருந்ததால், சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் பார்த்த போது, இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து, உடல்களை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.