உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தேரி மண் கொள்ளை அதிகாரிகள் சோதனை

தேரி மண் கொள்ளை அதிகாரிகள் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வடலிவிளை பகுதியில் அரிய வகை சிவப்பு நிற தேரி மண்ணை அனுமதியின்றி ராட்சத இயந்திரங்கள் மூலம் பல அடி ஆழம் வரை தோண்டி எடுத்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக புகார் எழுந்தது. விவசாயம் செய்வதாகக் கூறி தேரிக்காட்டு நிலங்களை விலைக்கு வாங்கும் கும்பல்கள், அங்குள்ள பனை மரங்களை அகற்றி மண்ணை தோண்டி செங்கல் தயாரித்து கேரளாவுக்கு விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விவசாயம் மற்றும் பனைத் தொழிலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என திருநெல்வேலி கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Venkata Krishnan
நவ 16, 2026 10:10

இந்த வேலைகள் திமுக காலத்திலிருந்து நடைபெறுகிறது. அப்போது திமுக மலைவுக்கு நன்கு தெரியும். அவரை விசாரித்தால் உண்மை புலப்படும்.


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2026 07:59

மண்ணின் நிறமே அருமை , இந்த இடத்துக்கு எப்படி போக வேண்டும் , அருகில் இருக்கும் நகரங்களை சொல்வீர்களா


Bhaskaran
நவ 15, 2026 03:11

அப்பாவு ஆட்களா இருப்பாங்களோ .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை