உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருச்செந்துாரில் மோதல்: விசாரிக்க முடிவு

திருச்செந்துாரில் மோதல்: விசாரிக்க முடிவு

திருநெல்வேலி:திருச்செந்துார் முருகன் கோயிலில் கண்காணிப்பாளர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க இருப்பதாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார். திருநெல்வேலி சுற்றுலா மாளிகையில் கண்ணதாசன் நேற்று முந்தைய வழக்குகளில் விசாரணையை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது போலீஸ்காரர் நடத்திய தாக்குதல் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. உண்மையை கண்டறிய அங்கு நேரில் சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன். அதன் பிறகு, ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி அகாடமியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், ஆணையம் தானாகவே வழக்கை எடுத்துக் கொண்டது. ஆனால் அரசுத் துறைகள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. எனவே தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் துாய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடம் தகுதியற்றதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து, அங்கு செப். 13ல் (இன்று) ஆய்வு செய்ய உள்ளேன். சமீபத்தில் போலீசார் மீது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போலீசார் தனியாக செல்லாமல் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். கோவையில் சக்கர நாற்காலி இல்லாமல், நோயாளியை மகன் தள்ளிச் சென்ற வீடியோ குறித்து இருவேறு தகவல்கள் வந்துள்ளன. இது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ