மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
சேரன்மகாதேவி : சேரன்மகாதேவியில் சிகரெட் கடன் கொடுக்க மறுத்த கடைக்காரரை அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சேரன்மகாதேவி லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் பொன்னுசாமி (56). இவர் சேரன்மகாதேவி தேரடி தெருவில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரிடம் கடையத்தெருவை சேர்ந்த செண்பகம் மகன் துரை (எ) சுப்பையா சிகரெட் கடன் கேட்டுள்ளார். ஏற்கனவே இவர் 300 ரூபாய் கடன் வைத்திருப்பதால் பொன்னுசாமி கொடுக்க மறுத்துள்ளார்.இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு முற்றியது. இந்நிலையில் துரை (எ) சுப்பையா அங்கிருந்த மண்வெட்டி கணையால் பொன்னுசாமியை பல இடங்களில் தாக்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பொன்னுசாமி அங்கிருந்து ஓடவே மயக்கமாகி கீழே விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்சிங் வழக்குப்பதிவு செய்து துரை (எ) சுப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
29-Sep-2025
25-Sep-2025