மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : நெல்லையில் அறிவுரைகளை பின்பற்றாமல் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் போது விபத்து நடந்தால் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.நான்குநேரி அருகே கைலாசநாதபுரத்தில் கடந்த 7ம்தேதி சிறுவன் சுதர்சன் மூடப்படாத ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்சம்பவம் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் ஆழ்துளைக்கிணறுகள் அமைப்பவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.நெல்லை மாநகராட்சிப்பகுதியில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கும் போது தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:நெல்லை மாநகராட்சிப்பகுதியில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்படும் இடத்தின் உரிமையாளர், கிணறு அமைப்பவர் எழுத்து மூலம் 15 நாட்களுக்கு முன் மாநகராட்சி கமிஷனருக்கு தெரிவிக்க வேண்டும். ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் பதிவு பெற்றவராக இருக்க வேண்டும். பணி நடக்கும் இடத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும்.கிணறு அமைக்கும் பணி முடிந்ததும் அப்பகுதியை வேலியிட்டு பாதுகாக்க வேண்டும். தடுப்புச்சுவர் 0.30 மீட்டர் உயரத்தில் கான்கிரீட்டால் அமைக்க வேண்டும். தூர்ந்து போன, பயனற்ற, நீர்ஆதாரம் கிடைக்காத ஆழ்துளைக்கிணறுகளை களிமண், மண், சிறுகற்களால் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை முழுமையாக நிரப்ப வேண்டும்.இந்த அறிவுரைகளை பின்பற்றி மாநகராட்சி பகுதியில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க வேண்டும். அறிவுரைகளை பின்பற்றாமல் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் போது விபத்து நடந்தால் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் உரிமையாளரே முழுப்பொறுப்பு. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
29-Sep-2025
25-Sep-2025