உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் அதிரடி மாற்றம் : கலெக்டர், கமிஷனர் "டிரான்ஸ்பர்

நெல்லை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் அதிரடி மாற்றம் : கலெக்டர், கமிஷனர் "டிரான்ஸ்பர்

திருநெல்வேலி : நெல்லை கலெக்டர், நெல்லை மாநகராட்சி கமிஷனர் உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.நெல்லை கலெக்டராக நடராஜன் கடந்த மாதம் 5ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் நேற்று அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டார்.தூத்துக்குடி கலெக்டராக பணியாற்றிய செல்வராஜ் நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். கன்னியாகுமரி கலெக்டராக பணியாற்றிய ஆஷிஷ் குமார் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். குமரி கலெக்டராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், தமிழகத்தில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதில் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிரடி மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சில அதிகாரிகள் சாதி ரீதியாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டது. ஒரு சிலர் மத அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் புகார் மனுக்களும் அனுப்பபட்டது. துறை வாரியான கூட்டங்களில் அதிகாரிகளிடம் சிலர் தாறுமாறாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.இதனை கண்டித்து அரசு ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். இதுதொடர்பாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பின்னணியின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த இடமாற்றத்தை தொடர்ந்து அரசு ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு 'குஷி' அடைந்துள்ளனர்.நெல்லை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய சுப்பையனும் இடமாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை