உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மேலப்பாளையம் சந்தையில் ஆயுதங்கள்? : போலீசார் அதிரடி சோதனை

மேலப்பாளையம் சந்தையில் ஆயுதங்கள்? : போலீசார் அதிரடி சோதனை

திருநெல்வேலி : மேலப்பாளையம் சந்தையில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலப்பாளையத்தில் செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். சந்தை நாட்களில் அதிகாலை 3 மணி முதல் ஆடு, மாடு, கோழி விற்பனை களைகட்டும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு திரண்டு வருவர். சந்தை வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்நிலையில் மேலப்பாளையம் சந்தையில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசுக்கு போன் மூலம் ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ மேற்பார்வையில் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பற்குணம் தலைமையில் போலீசார் நேற்று காலை முதல் மதியம் வரை சந்தை முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சந்தை உள், வெளி வளாகத்தை முழுமையாக சோதனையிட்டனர். ஆயுதங்கள், வெடிகுண்டுகள் சிக்கவில்லை. சந்தை விற்பனையை சீர்குலைக்கும் வகையில் விஷமிகள் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பியுள்ளார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட 'அதிரடி' சோதனையால் மேலப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி