மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியின் புதிய கமிஷனராக அஜய் யாதவ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் மகராஷ்டிரா மாநிலத்தில் குடியிருந்து வருகின்றனர்.கடந்த 2006ம் ஆண்டு ஐஏஎஸ்.,தேர்ச்சி பெற்று மதுரையில் துணை கலெக்டராக பணியாற்றினார். 2008-09ம் ஆண்டு மயிலாடுதுறையில் சப்-கலெக்டராக பணியாற்றினார். அக்டோபர் மாதம் 2009ம் ஆண்டு முதல் வணிகவரித்துறை உதவி கமிஷனராக(செயலாக்கத்துறை)யில் பணியாற்றினார். இந்நிலையில் அவர் நெல்லை மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்.அவர் கூறுகையில்,''மாநகராட்சி துறையில் பணியாற்றுவது இதுவே முதல் முறை. நெல்லைக்கு முதன் முறையாக வந்துள்ளேன். இங்குள்ள பணிகள் என்னென்ன உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இத்துறையில் மக்களின் சேவைகள் அறிந்து சிறப்பாக பணியாற்றுவேன்.'' என்றார்.இதற்கிடையே மாநகராட்சி கமிஷனராக இருந்த சுப்பையன் தனது பொறுப்புகளை புதிய கமிஷனர் அஜய் யாதவிடம் ஒப்படைத்தார்.
29-Sep-2025
25-Sep-2025