மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
செங்கோட்டை : பண்பொழி டவுன் பஞ்., பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாட்டர் டேங்குகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் உறுதியளித்துள்ளார். கடையநல்லூர் தொகுதி பண்பொழி டவுன் பஞ்., பகுதிகளில் பண்பொழி, கந்தசாமிபுரம், திருமலைக்கோவில் அடிவாரம், கரிசல்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. 15 வார்டுகளை கொண்ட இந்த டவுன் பஞ்.,சில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக கூடுதலாக இரண்டு வாட்டர் டேங்குகள் அமைத்திட வேண்டுமென வலியுறுத்தினர்.
இது தொடர்பாக பண்பொழி அதிமுக செயலாளர் பரமசிவன் பண்பொழியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்கும், கரிசல்குடியிருப்பில் 1 லட்சம் லிட்டர் வாட்டர் டேங்கும் அமைத்து தரவும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு நிதி திட்டத்தில் இதற்கான பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் மனு அளித்தார். இதனை தொடர்ந்து பண்பொழி டவுன் பஞ்., மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பண்பொழி, கரிசல்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இரண்டு வாட்டர் டேங்குகள் அமைத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தூர்பாண்டியன் உறுதியளித்துள்ளார்.
29-Sep-2025
25-Sep-2025