உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பாளை., சின்மயா பள்ளியில் விளையாட்டு விழா

பாளை., சின்மயா பள்ளியில் விளையாட்டு விழா

திருநெல்வேலி : பாளை., சின்மயா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆசிரியர் தின விழா நடந்தது.விழாவில் தமிழ்நாடு 3வது மகளிர் பெட்டாலியன் என்சிசி., அதிகாரி குல்டீப்சிங் பந்துசு விளையாட்டு விழா கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும். பள்ளியில் உள்ள அதிநவீன விளையாட்டு உபகரணங்களின் மூலம் நன்கு பயிற்சி பெற்று பல்வேறு சாதனைகளை படைக்க முன் வரவேண்டும் என்றார். இதனையடுத்து நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் ரேணுகா சங்கரநாராயணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் பங்கேற்ற பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் ஜெயவெங்கடேஷ், உடற்கல்வி ஆசிரியை மதிப்பிரியா, உடற்கல்வி ஆசிரியர் மனோகரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ