உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குடிபோதையில் தகராறு கழுத்தை அறுத்து தந்தை கொலை : நெல்லை அருகே மகன் வெறிச்செயல்

குடிபோதையில் தகராறு கழுத்தை அறுத்து தந்தை கொலை : நெல்லை அருகே மகன் வெறிச்செயல்

திருநெல்வேலி : நெல்லை அருகே பழையபேட்டையில் பட்டப்பகலில் மது குடித்து விட்டு தகராறு செய்த தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். பழையபேட்டை, வாணியர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(66). இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு லட்சுமி என்ற மகளும், மாரியப்பன்(35) என்ற மகனும் உள்ளனர். மாரியப்பன் நெல்லையில் உள்ள பலகார கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே சுப்பிரமணியன் மது குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். அதுபோல் நேற்று மதியம் சுப்பிரமணியன் மது குடித்து விட்டு, வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததோடு, அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன், கட்டிலில் படுத்திருந்த தனது தந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதனையறிந்த குடும்பத்தினர் சத்தம் போட்டதால், மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்த மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஸ்டாலின், பேட்டை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ், சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவரின் உடலை பரிசோதனைக்காக பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மாரியப்பனை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி