மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி பிரச்னை தொடர்பாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களுக்கு வெளிப்படையான நேர்மையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என எதிர்பார்கப்பட்டது. ஆனால் கவுன்சிலிங் நடத்தப்படாததால் ஆசிரிய சங்கங்கள் அதிருப்தி அடைந்தன. எனினும், பல்வேறு மாவட்டங்களில் இடைநிலை முதல் முதுகலை ஆசிரியர்கள் வரை கவுன்சிலிங் இல்லாமல் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டதாவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் முதுகலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்த சூழ்நிலையில் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 19ம் தேதி உள் மாவட்ட அளவிலும், 20ம் தேதி வெளி மாவட்ட அளவிலும் கவுன்சிலிங் நடக்கிறது. ஆனால் தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படாததால் இவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் முதல் தலைமை ஆசிரியர்கள் வரை உடனடியாக தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்த வேண்டும். பின்னர் ஏற்படும் காலி இடங்களுக்கு வெளிப்படையான நேர்மையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தி தொடர்ந்து காலி பணியிடங்களில் புதிய ஆசிரிய, ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று ஆசிரிய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025