உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் பலி

பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ஆழ்வார்குறிச்சி : திருமலையப்பபுரத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார். வீரவநல்லூர் யாதவர் நடுத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(54). இவர் நேற்று முன்தினம் திருமலையப்பபுரத்தில் தனது உறவினரின் திருமணத்திற்கு வந்து விட்டு, இரவு தென்காசியில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்ஸில் வீரவநல்லூருக்கு செல்லுவதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். இதில் பஸ்சின் இடதுபுற டயர் இவரது வயிற்று பகுதியில் ஏறி இறங்கியதால் படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில் அம்பை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். கடையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி