உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கடையநல்லூர் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி

கடையநல்லூர் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி

கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக பலியானார். சிவகிரி அருகேயுள்ள தளவாய்புரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது மகன் செய்யதலி (25). இவரும், தனது நண்பர் மாரிமுத்து (டிரைவர்), செல்வராஜ் (38), குருசாமி (37) ஆகிய நான்கு பேரும் தென்காசியிலிருந்து ஊருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். கார் புன்னையாபுரம் அருகே செல்லும் போது கார் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே செய்யதலி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை