மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
குற்றாலம்:தினமலர் செய்தி எதிரொலியாக குற்றாலத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது.குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கடந்த ஆண்டு குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது. இதில் குடிநீர் தொட்டி மேல்பகுதி சேதமடைந்து காணப்பட்டது. இதனால் மழைநீர் தொட்டிக்குள் சென்று கலங்கிய நீராகவும், புழு, பூச்சிகள் நிறைந்தும் காணப்பட்டது.சுற்றுலா பயணிகள் நலன் கருதி குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து குற்றாலம் டவுன் பஞ்., நிர்வாகம் சேதமடைந்த தொட்டியை மாற்றி புதிய தொட்டி பொருத்தியுள்ளது. தினமலருக்கும், டவுன் பஞ்.,சிற்கும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
29-Sep-2025
25-Sep-2025