மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
வள்ளியூர்:வள்ளியூர் நகர காங்., சார்பில் முப்பெரும் விழா நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா, மூப்பனார் பிறந்த நாள் விழா மற்றும் காங்., கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா வள்ளியூர் பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. விழாவிற்கு நகர காங்.,தலைவர் அல்போன்ஸ் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட முன்னாள் சேவாதள அமைப்பாளர் கணபதிராஜன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் சசி வரவேற்றார்.விழாவில் நெல்லை எம்.பி., ராமசுப்பு, மாவட்ட காங்.,தலைவர் மோகன்குமாரராஜா, மாநில இளைஞர் காங்., முன்னாள் செயலாளர் ஜோதி, வட்டார தலைவர்கள் சுயம்புலிங்கதுரை, ஜெயபால் மற்றும் அமீர்கான், பாண்டியன், சீராக் இசக்கியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜ் நன்றி கூறினார்.வாகைக்குளத்தில் நடந்த ராஜிவ் பிறந்த நாள் விழாவிற்கு காங்., செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். அலங்கரிக்கப்பட்ட ராஜிவ் படத்திற்கு கல்யாணி, சுந்தரவடிவேல், அழகுவடிவு, சங்கர், பூபாலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
29-Sep-2025
25-Sep-2025