உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கல்லூரி மாணவர்களுக்குமதிமுக சார்பில் போட்டிகள்

கல்லூரி மாணவர்களுக்குமதிமுக சார்பில் போட்டிகள்

திருநெல்வேலி:நெல்லையில் மதிமுக மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதைப்போட்டி நடக்கிறது.நெல்லை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் பெருமாள் அறிக்கை:நெல்லையில் மதிமுக சார்பில் வரும் 15ம்தேதி அண்ணா பிறந்தநாள் விழா திறந்தவெளி மாநாடு நடப்பதையொட்டி இலக்கிய அணி சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதைப்போட்டி நடக்கிறது.கட்டுரைப்போட்டியில் பங்கேற்பவர்கள் 'அண்ணாவின் வண்ணத்தமிழும், மழைத்தமிழும்' என்ற தலைப்பில் 8 பக்க அளவில் கட்டுரை எழுத வேண்டும். அண்ணாவின் இலக்கியப்படைப்புகளின் சுவை, மேடைப்பேச்சின் அழகுத்தமிழை குறிப்பிடும் வகையில் கட்டுரை இருக்க வேண்டும்.கவிதைப்போட்டியில் பங்கேற்பவர்கள் 'அண்ணாந்து பார்த்தேன் அண்ணா' என்ற தலைப்பில் 40 வரிகளுக்குள் மரபுக்கவிதையோ, புதுக்கவிதையோ எழுதலாம். சிறந்த கட்டுரை, கவிதைக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.வெற்றி பெறுபவர்களுக்கு மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரிசு வழங்குவார். படைப்புக்களுடன், கல்லூரியில் படித்து வருவதற்கான சான்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.'எழுத்தாளர் மதுரா, மாநில இலக்கிய அணி தலைவர், மதிமுக, 316, கோயில் தெரு, பரப்பாடி - 627110, நெல்லை மாவட்டம், 99656 78311' என்ற முகவரிக்கு செப்டம்பர் 11ம்தேதிக்குள் படைப்புக்களை அனுப்ப வேண்டும்.இவ்வாறு மாவட்டச்செயலாளர் பெருமாள் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை