உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சங்கரன்கோவில் பாங்கில் கள்ளநோட்டுகொடுத்தவரிடம் போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் பாங்கில் கள்ளநோட்டுகொடுத்தவரிடம் போலீசார் விசாரணை

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் ஸ்டேட் பாங்கில் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்ததாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சங்கரசுப்பிரமணியன்(41). இவர் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் சங்கரன்கோவில் ஸ்டேட் பாங்கில் சங்கரசுப்பிரமணியன் அவரது மனைவி பகவதி கணக்கில் 80 ஆயிரம் ரூபாய் கட்டினார். அப்போது அவர் கட்டிய பணத்தில் 500 ரூபாய் நோட்டுகளில் 43 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து பாங்க் அதிகாரி கருணாகரன் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சங்கரசுப்பிரமணியனை பிடித்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ