உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தேமுதிக., தலைவர் விஜயகாந்த் பிறந்தாள் விழாரூ. 6 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

தேமுதிக., தலைவர் விஜயகாந்த் பிறந்தாள் விழாரூ. 6 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

திருநெல்வேலி:தேமுதிக., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.இதுகுறித்து தே.மு.தி.க., கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் 15 நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 6வது ஆண்டாக இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. விஜயகாந்த் பிறந்தநாளான வரும் 25ம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகளில் மும்மத வழிபாடு நடத்தப்படுகிறது. சிறுவர் இல்லங்களில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரஙம் வழங்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் கட்சியின் கொடியேற்று விழா நடத்தப்படுகிறது.வரும் 26ம் தேதி பாப்பாக்குடி ஒன்றியம் சார்பில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 27ம் தேதி வள்ளியூர் பழவூரில் உள்ள ஆதரவற்ற குழந்கைதளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஊரல்வாய்மொழி பகுதியில் 500 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது. பணகுடி பேரூர் கழகம் சார்பில் ஏழைகளுக்கு நடத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.28ம் தேதி விக்கிரமசிங்கபுரத்தில் நகர கழகம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 29ம் தேதி சேரன்மகாதேவியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. 30ம் தேதி வள்ளியூர் பேரூர் கழகம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. 31ம் தேதி மாஞ்சோலை எஸ்டேட் பகுதயில் இலவச கண்சிகிச்சை முகாம் மற்றும் கொடியேற்று விழா நடக்கிறது.வரும் செப்டம்பர் 1ம் தேதி கல்லிடைக்குறிச்சியில் முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. 2ம் தேதி ராதாபுரம், திசையன்விளையில் ரத்ததானம் நடக்கிறது. 3ம் தேதி மேலச்செவலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. 4ம் தேதி சேரன்மகாதேவியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. பாளை.யில் இலவச கண் கிசிச்சை முகாம் நடக்கிறது.5ம் தேதி அம்பாசமுத்திரம், வீரவநல்லூரில் உள்ள முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. 6ம் தேதி களக்காடு முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. 7ம் தேதி அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரத்தில் கொடியேற்று விழா, முக்கூடலில் முதியோருக்கு புத்தாடை வழங்கப்படுகிறது. 8ம் தேதி பாளை. பகுதியில் கொடியேற்று விழா நடக்கிறது.மேலும் பல்வேறு பகுதிகளில் நடக்கும் விழாவில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விழாவில் எம்எல்ஏ.,க்கள் மைக்கேல்ராயப்பன், ஆஸ்டின், சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு கணேஷ்குமார் ஆதித்தின் கூறினார்.பேட்டியின் போது அவைத்தலைவர் துரைவேலன், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.முருகன், பாளை. ஒன்றிய செயலாளர் என்.முருகன், தொழிற்சங்க துணை செயலாளர் ஹரிமகராஜன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி