உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பழைய குற்றாலம் பள்ளியில் விளையாட்டு விழா

பழைய குற்றாலம் பள்ளியில் விளையாட்டு விழா

குற்றாலம்:பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22ம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக வன பாதுகாவலர் அசோக் உப்ரெட்டி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயகுமாரி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். கடந்த ஆண்டின் சாம்பியன்கள் ஒலிம்பிக் தீபம் ஏற்றினர். பள்ளி மாணவர் துணை தலைவி மிராக்ளின் பால்சுசி வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஆர்.ஜே.வி.பெல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை