மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
கடையநல்லூர் : கடையநல்லூர் காசிதர்மத்தில் திடீர் வார்டு மாற்றத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக 1வது வார்டு மக்கள் அறிவித்துள்ளனர். கடையநல்லூர் யூனியன் காசிதர்மம் பஞ்.,சில் 1வது வார்டு பகுதியில் சுமார் 500 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி 1வது வார்டாக இருந்துள்ளது. இங்குள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எல்லாவற்றிலும் அப்பகுதி 1வது வார்டு என குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. தற்போது 1வது வார்டினை 8,9 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அரசு வழங்க கூடிய சலுகைகளை பெறுவதில் பாதிப்பு ஏற்படக்கூடுமென கருதியும், மாற்றப்பட்ட வார்டினை மீண்டும் 1வது வார்டாக இருக்க வேண்டும் என்வும் இப்பகுதி மக்கள் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பபட்டுள்ளது. இது தொடர்பாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் யூனியன் அதிகாரிகளிடம் நேற்று மனு வழங்கப்பட்டுள்ளது. வார்டினை மாற்றியமைக்காவிட்டால் உள்ளாட்சி தேர்லை புறக்கணிக்க போவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
29-Sep-2025
25-Sep-2025