உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மூன்று கன்றுகள் ஈன்ற பசு கடையநல்லூரில் அதிசயம்

மூன்று கன்றுகள் ஈன்ற பசு கடையநல்லூரில் அதிசயம்

கடையநல்லூர் : கடையநல்லூரில் மூன்று கன்றுகளை ஈன்ற பசுவினை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடையநல்லூரை அடுத்த மேலக்கடையநல்லூர் வேதக்கோவில் தென்வடல் தெருவை சேர்ந்த பரமசிவன், வீரம்மாள். இவர்களது வீட்டில் பசுமாடு ஒன்று கன்று போடும் நிலையில் இருந்து வந்தது. நேற்று காலை பசுமாடு முதலில் ஒரு குட்டியை ஈன்றது. அதனை பராமரித்து விட்டு இருவரும் காட்டிற்கு சென்று விட்டனர். சில மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த பசு மீண்டும் ஒரு கன்றினை ஈன்றதை பரமசிவம் மற்றும் வீரம்மாள் கண்டனர். தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் மூன்றாவது குட்டியையும் அந்த பசு ஈன்றது.சுமார் 5 மணி நேரத்தில் பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்ற அதிசம் குறித்த தகவல் கடையநல்லூர் பகுதியில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து மூன்று கன்றினையும், அதனை ஈன்ற பசுவையும் பார்ப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அனைவருமே கன்றுகளையும், பசுமாட்டினையும் பார்த்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ