கட்சி பேதமின்றி பங்கேற்க வாங்க
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க வாழ்த்து தெரிவித்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நன்றி. அவர் மிகச் சரியாக குறிப்பிட்டதை போல, விரும்பும் தெய்வங்களை வழிபடுவது, அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லாரும் உணர வேண்டும். எனவே, கட்சி பேதமின்றி, ஆன்மிக நோக்கத்துடன் நடக்கும் மாநாட்டில், உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்க வேண்டும்.- நயினார் நாகேந்திரன்,தமிழக பா.ஜ., தலைவர்