உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை - திருச்செந்தூர் இடையே ரயில் சோதனை ஓட்டம்

நெல்லை - திருச்செந்தூர் இடையே ரயில் சோதனை ஓட்டம்

திருநெல்வேலி: கனமழையால் சேதமடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இன்று ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.டிச.,17, 18 தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், திருச்செந்தூர் - நெல்லை இடையேயான ரயில்வே தண்டவாளங்கள் சேதம் அடைந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் வடிந்த பிறகு, திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணி, துரிதமாக நடந்து வந்தது. இந்தபணிகள் நேற்றுடன் முடிவடைந்தது.இதனையடுத்து, தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையிலான குழுவினர் இந்த பாதையில் ரயில் இன்ஜீனை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி