வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாலரை வருசத்தை விடியல்களை சம்பாரிக்க விட்ட பிறகு போராட்டம் நடத்தி பயனில்லை. இனி அதிமுக ஆட்சிக்கு வந்தால் வாரந்தோறும் போராட்டம் பேரணிகள் நடத்தலாம் தோழகர்ளே.
திருநெல்வேலி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், பத்தாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் இந்நாள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர். சி.ஐ.டி.யு., சங்கத்தினர் ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு ஊழியர் நீண்ட தாடியுடன் காவி உடையில் நிஜமாகவே எந்த ஓய்வூதிய பலன்களும் முறையாக கிடைக்காததால் சாமியாராகவே மாறிவிட்டதை உணர்த்தும் வகையில் சாமியார் உடையில் போராட்டத்தில் பங்கேற்றார். நேற்று முன் தினம் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பது போல நடித்தார். தினமும் பல வித போராட்டங்களில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
நாலரை வருசத்தை விடியல்களை சம்பாரிக்க விட்ட பிறகு போராட்டம் நடத்தி பயனில்லை. இனி அதிமுக ஆட்சிக்கு வந்தால் வாரந்தோறும் போராட்டம் பேரணிகள் நடத்தலாம் தோழகர்ளே.