| ADDED : அக் 08, 2011 01:13 AM
ஆழ்வார்குறிச்சி : கடையம் பகுதிகளில் காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்திய கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர்கான் ஓட்டு சேகரித்தார்.கடையம் யூனியனில் 16வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக காங்., கட்சி சார்பில் போட்டியிடும் மூத்த காங்., பிரமுகர் வைகுண்டராஜன் மனைவி சரஸ்வதி மற்றும் கடையம் யூனியன் கவுன்சிலராக 4வது வார்டில் காங்.,சார்பில் போட்டியிடும் ஆலங்குளம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., பிரதிநிதி மாரியப்பன் மனைவி திரவியகலா மாரியப்பன் ஆகியோருக்கு ஆதரவாக இந்திய கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர்கான் மற்றும் சிட்டிங் யூனியன் கவுன்சிலர் டி.கே.பாண்டியன், மாவட்ட தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் அழகுதுரை, வெய்க்காலிபட்டி ரமேஷ்மாயவன், கீழக்கடையம் பரமசிவன், மாரியப்பன், மகளிரணி தங்கம்மாள் உட்பட காங்கிரசார் ஓட்டு சேகரித்தனர்.கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோயில் அருகே இவர்களுக்கு ஆதரவாக இந்திய கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர்கான் மெயின்ரோட்டில் நின்றபடி ஓட்டு சேகரித்தார். மேலும் கடையம் யூனியன் பகுதிகளில் காங்., சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக இவர்கள் ஓட்டு சேகரித்தனர்.