வாகனம் மோதி இருவர் பலி
திருநெல்வேலி : கூடங்குளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர்.திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கூடங்குளம் -- உவரி கிழக்கு கடற்கரை சாலை முருகானந்தபுரம் அருகே நேற்று அதிகாலை 2 பேர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தனர். கூடங்குளம் போலீசார் விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் பீஹாரை சேர்ந்த பிரயாக்ரிஷி 40, சோக்தாரிஷி 51, என தெரியவந்தது. இவர்கள் அதே பகுதியில் வேலைக்கு சென்ற போது வாகனம் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.