உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கிரைண்டர் ஆப் வழிப்பறி சிறுவன் உட்பட இருவர் கைது

கிரைண்டர் ஆப் வழிப்பறி சிறுவன் உட்பட இருவர் கைது

திருநெல்வேலி:'கிரைண்டர் ஆப்' வாயிலாக பழகியவரிடம், மொபைல் போன் மற்றும் பணம் பறித்த சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்துார் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 21; கல்லுாரி மாணவர். ஓரின சேர்க்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும், 'கிரைண்டர்' மொபைல் போன் செயலி வாயிலாக, நண்பர்களுடன் பழகி வந்தார். நீண்ட நாட்களாக பழகிய ஒரு நண்பர், ஸ்ரீதரை கிருஷ்ணாபுரம் அருகே கோதாநகர், கல்வெட்டான்குழிக்கு வருமாறு கூறினார்.அங்கு சென்ற ஸ்ரீதரிடம், அந்த நபரும், உடன் வந்த 17 வயது சிறுவனும் சேர்ந்து மிரட்டி, மொபைல் போன் மற்றும் 4,000 ரூபாயை பறித்துச் சென்றனர். ஸ்ரீதர் சிவந்திப்பட்டி போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த கருப்பசாமி 21, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை