மேலும் செய்திகள்
கொடைக்கானல் ரோட்டில் பாறையில் மோதி கவிழ்ந்த வேன்
06-May-2025
திருநெல்வேலி : துாத்துக்குடியில் இருந்து வீரவநல்லூர் திருமண வீட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்ததில் டிரைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நேற்று நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக துாத்துக்குடியில் இருந்து ஒரு வேனில் பெண் வீட்டார் வந்தனர். துாத்துக்குடியை சேர்ந்த சாமுவேல்ராஜ் 45, வேனை ஓட்டினார். வேனில் 10 பேர் இருந்தனர். திருநெல்வேலி, கே.டி.சி. நகர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது முன்பாக சென்ற லாரியை முந்த முயற்சித்தது. அப்போது லாரி மீது மோதிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சாமுவேல்ராஜ் உள்பட 7 பேர் காயமுற்றனர்.டிரைவர் உட்பட மூன்று பேர் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வீரவநல்லூர் கிளம்பிச் சென்றனர்.
06-May-2025