உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / முன்னாள் எஸ்.ஐ., கொலையில் தலைமறைவான பெண் கைது

முன்னாள் எஸ்.ஐ., கொலையில் தலைமறைவான பெண் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நிலத்தகராறில் நடந்த கொலை வழக்கில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நுார்னிஷா நேற்று கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் ஹுசேன் 61. நிலம் தொடர்பான பிரச்னையால், மார்ச் 18ல் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக், மனைவி நுார்னிஷா உள்ளிட்டோரை போலீசார் தேடிவந்தனர். இதில் முகமது தவ்பிக் போலீசாரால் சுட்டு கைது செய்யப்பட்டார். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நுார்னிஷா, நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு, இரவு நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகமது தவ்பிக், அக்பர் ஷா 33, பீர்முகமது 37, கார்த்திக் என்ற அலிஷேக் 32, ஆகியோர் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rasheel
ஏப் 18, 2025 18:47

மார்க்கம் தனது ஆளையே பதம் பார்க்கிறது.


m.arunachalam
ஏப் 18, 2025 17:47

நல்ல முன்னேற்றம் . நல்லா வளர்த்திருக்காங்க . பெண்களை திருப்தி செய்ய தங்களை அழித்துக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை 90 சதவிகிதத்துக்கு மேல் ஆகிவிட்டது . தெளிதல் நலம் .


S.kausalya
ஏப் 18, 2025 07:29

காவல் நிலையத்தில் மற்றும் வழக்காடு மன்றத்தில், இவர்கள் இது எங்களின் மதம் மற்றும் குடும்பபிரச்சனை. இதில் நீங்கள் தலையிடுவது எங்களின் மத எண்ணத்தில் தலையிடுவதாகும்.. எனவே இது குறி்த்து நாங்கள் போராடுவோம் என சொல்ல போகிறார்கள் .


நிக்கோல்தாம்சன்
ஏப் 18, 2025 07:22

என்ன பொண்ணும்மா நீ


சமீபத்திய செய்தி