உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்

பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை, பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் தலைவர் அபிராமி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் பழனிவேல் முன்னிலை வகித்தார். இதில் சொத்து வரி குறித்த நிலை, பிறப்பு, இறப்பு, ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி நுழைவு வாயில் முன்பு பழுதடைந்த கல்வெட்டிற்கு பதில், புதிய கல்வெட்டு அமைத்தல், அண்ணாநகர், நாகலாபுரம் சாலை உள்ளிட்ட 8 இடங்களில், அங்கன்வாடி மையம் அமைக்க இடம் தேர்வு செய்தல் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஆய்விற்கு பேரூராட்சியை உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை