உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடசென்னையில் ஒரே நாளில் 11 கஞ்சா வியாபாரிகள் கைது

வடசென்னையில் ஒரே நாளில் 11 கஞ்சா வியாபாரிகள் கைது

சென்னை: சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, வீரா குட்டி தெருவில் உள்ள வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக, ஆர்.கே.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.போலீசார் ஆய்வு மேற்கொண்டு, வீட்டில் இருந்த 25 சிறிய கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். விற்பனையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளான வீராகுட்டி தெருவைச் சேர்ந்த சதீஷ், 45, தண்டையார்பேட்டை, நேரு நகரைச் சேர்ந்த சுரேஷ், 30, ஆகியோரை கைது செய்தனர். அதேபோல, வியாசர்பாடி, பள்ளத்தெருவில் வியாசர்பாடி போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எம்.கே.பி.நகரைச் சேர்ந்த லாரி டிரைவரான பூவரசன், 23, என்பவர் சிக்கினார். தொடர் விசாரணையில், தாமோதரன் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கமணி, 30, பள்ளத்தெருவைச் சேர்ந்த பார்த்திபன், 30, கெர்லினா, 29, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும், வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரில் வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பல வழக்குகளில் தொடர்புடைய தண்டையார்பேட்டை, அஜீஸ் நகரை சேர்ந்த நிதில் குமார், 30, சிக்கினார். தொடர்ந்து, பழைய வண்ணாரப்பேட்டை விஜய், 22, அஜித், 22, மணிகண்டன், 23, சத்யா, 28, ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை