உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடை கிளை நிலையம் மோசம் அச்சத்தில் 20 கிராம விவசாயிகள்

கால்நடை கிளை நிலையம் மோசம் அச்சத்தில் 20 கிராம விவசாயிகள்

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது கால்நடை மருத்துவ கிளை நிலையம்.இங்கு போளிவாக்கம், இலுப்பூர், வலசைவெட்டிக்காடு என, 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்து செல்கின்றனர்.இந்த கால்நடை மருத்துவ கிளை நிலையம் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், இங்கு பணிபுரியும் அலுவலர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து செல்கின்றனர்.மேலும், கால்நடை மருத்துவ கிளை நிலையம் போதிய பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டிக விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதனால், விவசாயிகள் கால்நடைகளை அழைத்து வர கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் கால்நடை கிளை மருத்துவ நிலையத்தை சீரமைக்க தகுந்த நடடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை