உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்தி வந்த 3 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்தி வந்த 3 லாரிகள் பறிமுதல்

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து உரிய அனுமதியின்றி லாரிகள் மூலமாக எம்- -சான்ட், ஜல்லி, கிராவல் உள்ளிட்ட கனிம வளங்கள் திருத்தணி வழியாக கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவரின் அறிவுறுத்தலின்படி திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப் - இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் தமிழக எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச் சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தை நோக்கி கனிம வளங்களை ஏற்றி வந்த 11 லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 3 லாரிகள் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்ததும், 8 லாரிகள் அதிகளவு பாரங்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று லாரிகளை பறிமுதல் செய்து 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை