உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.4 கோடியில் சாலை பணி

ரூ.4 கோடியில் சாலை பணி

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வி.கே.என்.கண்டிகை மற்றும் மத்துார் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் தார்ச்சாலைகள் சேதமடைந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதவிர சாலை குண்டும், குழியுமாக மாறியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். இதையடுத்து மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளில் பழுதடைந்த சாலை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை நேற்று திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை