மேலும் செய்திகள்
கோபி, கவுந்தப்பாடியில் விநாயகர் சிலை விசர்ஜனம்
08-Sep-2024
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரைப்பேட்டை, பாதிரிவேடு மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய ஐந்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பொது இடங்களில், அந்தந்த பகுதி விழா குழுவினர் சார்பில் மொத்தம், 187 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. முதல் நாளான நேற்று முன்தினம், 33 சிலைகளும், இரண்டாம் நாளான நேற்று, 22 சிலைகளும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.சிலை வைத்திருந்த இடத்தில், விழா குழவினர் சிறப்பு வழிபாடு நடத்தி, மினி லாரி, டிராக்டர் மற்றும் சரக்கு ஆட்டோக்களில், சிலைகளை எடுத்துச்சென்று பேண்டு வாத்தியம் முழங்க, வாண வேடிக்கை, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன், ஊர்வலமாக சென்று, நீர் நிலைகளில் கரைத்தனர். எளாவூர் அடுத்த ஏழு கண் பாலம் மற்றும் அந்தந்த கிராம பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட்டன. சிலை கரைக்கும் இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
08-Sep-2024