| ADDED : ஜூலை 22, 2024 06:07 AM
மாதவரம்: மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் தணிகாசலம், 60. இவர், மாதவரம், மஞ்சம்பாக்கம், பாரத் பெட்ரோல் 'பங்க்' ஊழியராக பணியாற்றுகிறார். நேற்று அதிகாலை பணியில் இருந்தபோது, ஆட்டோவில் வந்த ஆறு பேர் கும்பல், ஆட்டோவில் 'காஸ்' நிரப்ப வேண்டும் என கூறியுள்ளனர்.'இது 'காஸ்' பங்க் இல்லை; டீசல் பங்க்' என தணிகாசலம் கூறிய போது, ஆட்டோவில் இருந்த நபர், தணிகாசலம் முகத்தில் தாக்கி, பணப்பை மற்றும் இரண்டு மொபைல் போன்களை பறித்து சென்றனர்.இது குறித்து விசாரித்த மாதவரம் பால் பண்ணை போலீசார், ஏழுகிணறைச் சேர்ந்த மணிகண்டன், 32, கோபிநாத், 19, கிஷோர் குமார், 19, நாகேந்திரன், 18, மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்களை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 7,000 ரூபாய் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், மணிகண்டன் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.