மணவாள நகர் அரசு பள்ளியில் ரூ.80 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள்
மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் கே.ஈ.என்.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில், 750 மாணவியர் உட்பட 1,500 மாணவர்கள் 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில், நேற்று, 'ஆப்டஸ்' என்ற தனியார் நிறுவன சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நட்நதது.பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகர் தலைமையில் நடந்த விழாவில் 'ஆப்டஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எம்.ஆனந்த், மேலாளர் தயாநிதி ஆகியோர் கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை துவக்கி வைத்தனர்.இதில், பள்ளி ஆசிரியர்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும், 'யுனைட்டெட் வே ஆப் சென்னை' தலைமை செயல் அலுவலர் அஜர் உட்பட பலர் பங்கேற்றனர்.கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளை மூன்று மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக பள்ளித் தலைமையாசிரியர் தெரிவித்தார்.