மேலும் செய்திகள்
தடையின்றி பால் வினியோகம் ஆவின் நிறுவனம் ஏற்பாடு
29-Jul-2024
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்தப் பாலை திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கொழுப்பு சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.திருவள்ளூரில் தினமும், 1 லட்சம் லிட்டர் மற்ற மாவட்டங்களில், 5 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. எஞ்சிய பாலில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.இதில் ஆரஞ்ச் நிற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட 500 மி.லி., ஆவின் பால் 24 ரூபாய்; பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய், நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாக்கெட் பால் விற்பனை செய்வதன் வாயிலாக, டீலர்களுக்கும், பார்லர் உரிமையாளர்களுக்கும், ஒரு ரூபாய் கமிஷன் வழங்கப்படுகிறது. தனியார் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டு, 500 மி.லி., பால் பாக்கெட், 35 முதல் 37 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பாலை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர், திருப்பாச்சூர், கடம்பத்துார், மணவாளர் உட்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆவின் பால் டீலர்கள் மற்றும் கடைகளில் ஒரு பாக்கெட்டிற்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.விற்பனையாளரிடம் பால் கூடுதல் விலை குறித்து கேட்டால் விற்பனையாளர்கள் பொதுமக்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. எனவே ஆவின் பால் விற்பனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-Jul-2024