கொத்தடிமை மீட்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற அறிவுரை
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், பல்வேறு தொழில்களில் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்க, தொடர்ச்சியான காலமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட எல்லைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் வருவதை முறையாக கண்காணித்து அவர்கள் கொத்தடிமை தொழிலாளர்களாக உருவாவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்கும் வகையில், அவர்களை 'விடியல் திட்டத்தில்' சேர்க்க வேண்டும். மீட்கப்படும் தொழிலாளர்களை அனைத்து துறைகளிலும் உள்ள நல வாரியங்களில் இணைக்க வேண்டும். அவர்களுக்கு சுயஉதவிக் குழு உருவாக்கி தரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர்கள், ஷோபனா, தனபாலன், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.