உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாறுமாறாக நிறுத்தும் ஆட்டோக்களால் ஆம்புலன்ஸ் போவதில் சிக்கல்

தாறுமாறாக நிறுத்தும் ஆட்டோக்களால் ஆம்புலன்ஸ் போவதில் சிக்கல்

திருவள்ளூர், திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்புறம் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ேஷர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். சில நேரங்களில் ேஷர் ஆட்டோக்களில் பயணியரை ஏற்றுவதில் போட்டி ஏற்படுவதால் சாலையில் தாறுமாறாக ேஷர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றன.இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயணியரை ஏற்ற முடியால் செல்லும் நிலை ஏற்படுகிறது. ேஷர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் வாகனங்கள் நிறுத்துவது குறித்து கேட்டால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மருத்துவனை முன்புறம் நிறுத்தப்படும் ேஷர் ஆட்டோக்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி