உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.சின்னம்மாபேட்டையில் உள்ள அங்கன்வாடி வட்டார அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் புஷ்பாராணி தலைமை தாங்கினார்.இதில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர். அங்கன்வாடி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை