உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு

குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு

மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் ஒண்டிக்குப்பம் பகுதியில் குப்பையை தரம் பிரித்து வழங்குவது குறித்து, ஊரக வளர்ச்சித் துறையினர் பகுதிவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கடம்பத்துார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சிவகுமார் ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் ஜெயகுமார் பங்கேற்று மட்கும், மட்காத குப்பை குறித்து, தரம் பிரத்து காட்டினார்.பின், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் பொதுமக்களிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பை குறித்து செயல் முறை விளக்கத்துடன் எடுத்துரைத்து குப்பையை துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.மேலும், துாய்மை பணியாளர்களிடம் மக்களிடம் மட்கும், மட்காத குப்பை என, தரம் பிரித்து வாங்க வேண்டும் எனவும், அறிவுறுத்தினார்.இதில், ஒன்றிய பொறியாளர் பரந்தாமன், துாய்மை பணியாளர்கள் உட்பட பகுதிவாசிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி