உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குண்டும், குழியுமான பேருந்து நிலையம்: பயணியர் கடும் அவதி

குண்டும், குழியுமான பேருந்து நிலையம்: பயணியர் கடும் அவதி

திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலையம், குண்டும், குழியுமாக இருப்பதால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் திரு.வி.க., பேருந்து நிலையம் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. திருவள்ளூர் நகராட்சி பராமரிப்பில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், திருத்தணி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன.திருவள்ளூர் நகரைச் சுற்றியுள்ள பேரம்பாக்கம், திருவாலங்காடு, மெய்யூர், பூண்டி, பிளேஸ்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு, நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பொதுமக்கள் பல்வேறு பணிநிமித்தமாக வந்து செல்கின்றனர்.ஒரு ஏக்கருக்கும் குறைவாக அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தில் இருந்து, 20 பேருந்துகள் கூட நிறுத்த முடியாது. இதனால், புதிய பேருந்து நிலையம் ஊத்துக்கோட்டை சாலை, வேடங்கிநல்லுாரில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரு.வி.க., பேருந்து நிலையத்தில், தரை தளம் ஆங்காங்கே சிமென்ட் பெயர்ந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பேருந்தில் பயண செய்ய வரும் பயணியர் பள்ளத்தில் தவறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை