உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆவடி வீட்டுவசதி வாரியம் வழியாக பஸ் சேவை துவக்கம்

ஆவடி வீட்டுவசதி வாரியம் வழியாக பஸ் சேவை துவக்கம்

ஆவடி, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 1993ல் உருவாக்கப்பட்டது. இதில், வார்டு 40, 41 என இரண்டு செக்டரும் சேர்த்து, 6,000 குடியிருப்புகளில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இவர்கள், ஆவடி, கன்னிகாபுரத்தில் இருந்து பொது போக்குவரத்து ரயில் மற்றும் பேருந்து நிலையம் செல்ல, முறையே, ஒன்று மற்றும் ஒன்றரை கி.மீ., செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால், பகுதிவாசிகள் அவதி அடைந்தனர்.எனவே, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலை வழியாக சிற்றுந்து இயக்க, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த செப்., 2023 ல், மேற்கூறிய வழியில் பொது போக்குவரத்து ஆரம்பித்தால் பகுதிவாசிகள் பயனடைவர் என, நம் நாளிதழில் செய்தி வெளியிட்டது.இதையடுத்து, கோரிக்கையை ஏற்று, ஆவடியில் இருந்து திருவேற்காடு வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண் : எஸ் 52 சிற்றுந்துகள் நேற்று முதல் இவ்வழியாக இயக்கப்பட்டன.இந்த வழித்தடத்தில் சாதாரண பேருந்து மற்றும் மூன்று சிற்றுந்து உட்பட நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, மூன்று மினி பேருந்து மட்டும் இவ்வழியாக செல்லும் என்றும், நாள் ஒன்றுக்கு 30 நடை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி