காசநோய் ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள் கலெக்டர் வேண்டுகோள்
திருவள்ளூர்:'காச நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர், அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும்' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் காச நோய் இல்லா தமிழகம்- 2025 திட்டத்தின் கீழ், காசநோயாளிகளின் நண்பனாக பதிவு செய்தோருக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:காசநோய் போன்ற வைரஸ் பாக்டீரியா நோய்களுக்கு தற்போது இருக்கின்ற கால சூழ்நிலைக்கு ஏற்ப மருந்துகள் மற்றும் கருவிகள் வாயிலாக, கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 51,000 மேற்பட்டோருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இது போன்ற பரிசோதனையை அதிகப்படுத்தி நோய் தொற்றினை கண்டறிந்து முற்றிலுமாக காச நோய்களை ஒழிக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.துரிதமாக காசநோய் கண்டுபிடிக்கும் கருவியை அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வரிடம் கலெக்டர் வழங்கினார். காசநோயாளிகளின் நண்பனாக பதிவு செய்தோருக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லாரி மற்றும் மருத்துவமனை டீன் ரேவதி, இணை இயக்குனர் மீரா, மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.